1. Home
  2. தமிழ்நாடு

‘காதல்’, ‘கவிதை’ என பெயர் சூட்டிய கமல்ஹாசன்!

Q

பிக்பாஸ் சீசன் 1-ல் சினேகன் பங்கேற்றார். அதன் பிறகு, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.
2021-ம் ஆண்டு, சினேகன் சின்னத்திரை நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்தார்.
சில நாட்களுக்கு முன்பு, இந்தத் தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில், அந்தக் குழந்தைகளுக்கு நடிகர் கமல்ஹாசன் பெயர் வைத்துள்ளார் மற்றும் தங்க வளையல் சூட்டியுள்ளார்.
இதற்கான தகவல்களைச் சினேகன் தனது எக்ஸ் பதிவில் பகிர்ந்துள்ளார், “காதலர் தினத்தில் … எங்கள் தங்க மகள்களுக்குத் தங்க வளையல்களோடு … “காதல்” மற்றும் “கவிதை” என்ற பெயர்களை அணிவித்து வாழ்த்திய, நம்மவர் எங்களின் அன்பு 

தலைவர் 
பத்ம பூஷன்  கமல்ஹாசன் 
 அவர்களுக்கு எங்கள் அன்பின் நன்றிகள்.

நீங்களும் வாழ்த்துங்கள்
காதல் - கவிதை-யை 


 

Trending News

Latest News

You May Like