விஜய் மாநாடு குறித்த கேள்விக்கு கலாய் பதில் அளித்த கமல்ஹாசன்..!
தவெக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் சுமார் 35 நிமிடங்கள் உரையாற்றினார். அந்த உரையின் போது கொள்கை எதிரியாக பாஜகவையும் அரசியல் எதிரியாக திமுகவையும் மீண்டும் உறுதிப்பட தெரிவித்தார். இந்த மாநாட்டு உரையின் போது விஜய் திமுக பாஜக குறித்த கட்சிகளை மட்டுமல்லாமல் இந்த முறை அதிமுகவையும் விமர்சிக்க தொடங்கினார். அதிமுகவும் தவெகவும் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் பாஜகவோடு அதிமுக சேர்ந்ததை அடிமை கூட்டணி என்று விஜய் விமர்சித்தார்.
அதே சமயம் அதிமுகவின் மூத்த தலைவர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதாவை அவர் விமர்சிக்கவில்லை. அவர்களது மறைவிற்குப் பின்னர் தான் அதிமுக தேக்க நிலையை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது மட்டுமல்லாமல் போகிற போக்கில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரையும் விஜய் விமர்சித்தார். ‘அவர் வருவாருன்னு சொன்னாங்க வரல, அவரே வராத போது இவர் எப்படி வருவாரு என்று பேசினர்’ என்று ரஜினிகாந்தை பேர் குறிப்பிடாமல் விமர்சித்தார். அதேபோல் சினிமாவில் மார்க்கெட் போனதற்கு பின்னர் ரிட்டயர்டு ஆகும் நிலையில் நான் அரசியலுக்கு வரவில்லை. மிகப்பெரிய படை பலத்துடன் வந்திருக்கிறேன் என்று கமல்ஹாசனையும் அவர் மறைமுகமாக விமர்சித்தார்.
விஜயின் விமர்சனத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி காஞ்சிபுரத்தில் விஜயின் பெயரை குறிப்பிடாமல் பதிலளித்துள்ளார். அதேபோல் சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனிடம் தவெக இரண்டாவது மாநில மாநாடு மற்றும் நடிகர் விஜயின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
தவெக தலைவர் விஜய் மார்க்கெட் போன வின்னர் ரிட்டையர்டு ஆன பின்னர் தான் அரசியலுக்கு வரவில்லை என்று கூறியுள்ளார் உங்கள் கருத்து என்ன என்று கேள்வி எழுப்பினர்.அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், “இது பற்றி கருத்து சொல்வது என்றால், எனது பெயரை அவர் எங்கேயும் குறிப்பிட்டிருக்கிறாரா அல்லது வேறு யாருடைய பெயரையாவது சொன்னாரா அப்படி இருக்கும்போது எப்படி கருத்து தெரிவிக்க முடியும்? அட்ரஸ் இல்லாத கடிதத்திற்கு எப்படி பதில் எழுத முடியும்” என்று கேள்வி எழுப்பினார். மேலும் விஜய் தன்னுடைய தம்பி என்று அவர் தெரிவித்தார்.
.png)