வேட்புமனுவில் வெளியான தகவல் : கமலுக்கு ரூ.49 கோடி கடன் இருக்குதாம்..!

மக்களவை, மாநிலங்களவை,சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுவுடன் தங்களுடைய சொத்து விவரங்கள், கடன் உள்ளிட்ட விவரங்கள், வழக்குகள் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.
அதன்படி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தமது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த அபிடவிட்டில் சொத்து மதிப்பு உள்ளிட்ட விவரங்களைத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வேட்பாளர்களின் வேட்புமனு, அபிடவிட் ஆகியவை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.
சொத்து விவரங்கள்:
2023 - 24 நிதியாண்டில் வருமானம்: ரூ.78.90 கோடி
அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.59.69 கோடி.
அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.245.86 கோடி.
மொத்த சொத்தின் மதிப்பு ரூ.305.55 கோடி.
மொத்த கடன்கள் ரூ.49.67 கோடி
சென்னை ஆழ்வார்பேட்டை (2), உத்தண்டி (1) மற்றும் சோழிங்கநல்லூர் (1) உள்ளிட்ட இடங்களில் வணிக கட்டடங்கள் உள்ளதாகவும், அவற்றின் மதிப்பு ரூ.111.1 கோடி என்றும் கமல்ஹாசன்தெரிவித்துள்ளார்.
மேலும், திண்டுக்கல் வில்பட்டியில் ரூ.22.24 கோடி மதிப்பில் விவசாய நிலம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.கையில் ரொக்கமாக ரூ.2.60 லட்சம் வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கமலிடம் உள்ள கார்கள்:
கமலஹாசனிடம் மகேந்திரா பொலிரோ, மெர்சிடஸ் பென்ஸ், BMW, லக்சஸ் ஆகிய நவீன ரக கார்கள் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.8.43 கோடி ஆகும்.