1. Home
  2. தமிழ்நாடு

குடிநீர் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை நன்கொடையாக வழங்கிய மநீம தலைவர் கமல்ஹாசன்..!

1

இன்று உலக நாயகன் கமல்ஹாசன் பிறந்த நாள்.நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசனுக்கு சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் என ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் பல்வேறு மாவட்டங்களிலும் கமல்ஹாசன் பிறந்தநாளை ரசிகர்களும், அவரது கட்சி நிர்வாகிகளும் கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் உலக நாயகன் தனது பிறந்தநாளை முன்னிட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு, காற்றில் இருந்து குடிநீர் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை நன்கொடையாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வழங்கியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Trending News

Latest News

You May Like