1. Home
  2. தமிழ்நாடு

கரூர் பஸ் ஸ்டாண்டில் கையும் களவுமாக சிக்கிய கல்யாண ராணி..!

1

திருமணமாகாத இளைஞர்களை குறிவைத்து கல்யாண ஆசை காட்டி மோசடி செய்யும் சம்பவங்கள் அண்மைக்காலங்களில் அதிகரித்து வருகிறது. 30 வயதை கடந்த இளைஞர்களின் பெற்றோர்களை சந்தித்து நல்ல பெண் இருப்பதாகவும், வசதி இல்லாத அந்த பெண்ணுக்கு நகை, பணம் போட்டு திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று சில தரகர்கள் ஆசை வார்த்தை கூறுகிறார்கள்.

 

அப்படி சில தரகர்கள் காட்டும் பெண்ணின் புகைப்படம் அழகாக இருப்பதால் அதையும் உண்மை என்று நம்பி பெண்ணை திருமணம் செய்து கொடுக்கிறார்கள். அத்துடன் தரகருக்கு கணிசமான கமிஷனும் கொடுக்கிறார்கள். சில நாட்களிலேயே அந்த பெண் நகை பணத்துடன் தப்பி ஓடிவிடுகிறார். இப்படி அடிக்கடி சம்பவங்கள் நடந்துள்ளது. அண்மையில் திருப்பூர் மாவட்டம் தராபபுரத்தில் ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்ததாக கைதானார். அவருடன் புரோக்கர் பெண்ணும் கைதானார்.

 

அடுத்ததாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பூதிப்புரத்தைச் சேர்ந்த பெருமாயி தனது மகன் முருகனுக்கு (30) திருமணம் செய்வதற்காக, பெண் தேடியுள்ளார். அப்போது, புரோக்கர் என அறிமுகமான பொள்ளாச்சியைச் சேர்ந்த விஜயா (45) என்ற பெண் வந்தார். அதன்பின்னர் பேச்சுவார்த்தைக்கு பின், முருகனுக்கும் அந்த பெண்ணுக்கும் கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி பூதிப்புரத்தில் திருமணம் நடந்துள்ளது. பின்னர், பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளார்கள். ஆனால் மணப்பெண்ணின் தங்கை என கூறிய இளம்பெண் மட்டும் அங்கிருந்து சென்றிருக்கிறார். திருமண ஏற்பாட்டிற்காக விஜயா ரூ.1.80 லட்சம் கமிஷன் பெற்றுச் சென்றார்.

 

திடீரென மணப்பெண்ணின் தங்கை என கூறியவர், சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என கூறியதால் மணப்பெண், முருகன் உள்ளிட்டோர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பேருந்து நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, தங்கையுடன் மணப்பெண் மாயமானார். தகவலறிந்த விஜயா, மணப்பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அவருடன் சென்றிருக்கலாம் என்று கூறியதுடன், முருகனுக்கு வேறு பெண் பார்க்கலாம் என கூறி கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த காளீஸ்வரி (52) என்ற புரோக்கர் வாயிலாக, மற்றொரு பெண்ணை அழைத்து வந்துள்ளார். இதற்கு காளீஸ்வரி ரூ.80 ஆயிரம் கமிஷன் பெற்றிருக்கிறார். இப்படி ஏமாற்றிய விஜயா, காளீஸ்வரி, அருணாதேவி ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மூன்றதாவதாக கோவையைச் சேர்ந்த பெண் 3 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.. கரூர் மாவட்டம், புஞ்சை காளிக்குறிச்சி பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபர் கொசு வலை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த இளைஞருக்கும், கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ரேணுகா (36) என்ற பெண்ணுக்கும் கடந்த 12-ந்தேதி மண்மங்கலம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்தது. இந்தநிலையில் ரேணுகா ஏற்கனவே புதுக்கோட்டை, கோவையை சேர்ந்த 2 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்ததாகவும், அதனை மறைத்து 3-வதாக இந்த வாலிபரை ரேணுகா திருமணம் செய்த விஷயமும் தெரியவந்தது. இதுகுறித்து ரேணுகாவிடம், வாலிபர் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ரேணுகா, அந்த வாலிபரை மிரட்டி ரூ.20 லட்சம் மற்றும் 20 பவுன் தங்கநகைகளை கேட்டாராம். இதுகுறித்து அந்த வாலிபர் கரூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில் த ரேணுகா தப்பி செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு கரூர் பேருந்து நிலையத்திற்கு வந்தாராம். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் மகளிர் போலீசார் பஸ் நிலையத்திற்கு சென்று ரேணுகாவை சுற்றி வளைத்து கைது செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ரேணுகாவுக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதும், திருமணம் என்ற பெயரில் ஆண்களை ஏமாற்றி பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும், ரேணுகாவிற்கு உடந்தையாக இருந்த கோவை, தேவகோட்டையை சேர்ந்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
 

Trending News

Latest News

You May Like