1. Home
  2. தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம் - ஜி.வி பிரகாஷ்..!

1

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் பலியானதற்கு தமிழக அரசின் அலட்சியப்போக்கே காரணம். கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியது தான் இத்தகைய உயிர் பலிகளுக்கு காரணம் என்று எதிர்க்கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அந்த வரிசையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலியால் தமிழக அரசை இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம். நியாயப்படுத்த முடியாத பெருங்குற்றம். இழப்பீடுகள் எதையும் ஈடுகட்டாது. தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க உறுதி செய்ய வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
 


 

Trending News

Latest News

You May Like