இளைஞரின் தலையை துண்டித்து காளிக்கு படைத்த கும்பல்.. பட்டப்பகலில் அதிர்ச்சி சம்பவம் !

இளைஞரின் தலையை துண்டித்து காளிக்கு படைத்த கும்பல்.. பட்டப்பகலில் அதிர்ச்சி சம்பவம் !

இளைஞரின் தலையை துண்டித்து காளிக்கு படைத்த கும்பல்.. பட்டப்பகலில் அதிர்ச்சி சம்பவம் !
X

மதுரை அவனியாபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் 22 வயதான அல்வா என்ற முத்துச்செல்வம். அவனியாபுரம் பா.ம.க பிரமுகர் இளஞ்செழியன் மற்றும் அவரது தம்பி மாரி ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்.

இதனால் இரு தரப்பினரும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இளஞ்செழியன் மற்றும் அவரது தம்பி கொலையில் தொடர்புடைய முத்துச்செல்வதை தீர்த்துக்கட்ட திட்டம்போட்டு வந்தனர். 

இந்நிலையில் முத்துச்செல்வம் ஞாயிற்றுக்கிழமை மாலை பெரியார் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது மறைந்திருந்து அவரை நோட்டமிட்ட 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று, வழிமறித்து அவரை விரட்டியது.

முன்பே திட்டமிட்டபடி அங்குள்ள பத்ர காளியம்மன் கோவில் வாசலுக்கு முத்துச்செல்வத்தை விரட்டிச் அந்த கும்பல் விரட்டிச் சென்றது. காளி கோவில் வாசலில் சுற்றி வளைத்து கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் அவரை சரமாரியாக தாக்கினர்.

ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்த முத்துச் செல்வத்தின் தலையை தனியாக துண்டித்து கோவில் வாசலில் வைத்தனர். பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகினர்.

கொடூரமாக நடந்த இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் இணை ஆனையர் கார்த்திக் விசாரணை நடத்தினார். முந்தைய கொலைகளுக்கு பழிதீர்க்கும் வகையில் இந்த கொலை நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதை அடுத்து கொலையில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கொலையாளிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 

newstm.in 

Next Story
Share it