1. Home
  2. தமிழ்நாடு

காளியம்மன், பகவதி அம்மன், முத்தாலம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு ஆதார் கார்டு..!

1

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த கொடைரோடு அருகே உள்ள பொம்மனம்பட்டி கிராமத்தில் சுமார் 400-ஆண்டுகள் பழமையான காளியம்மன்,பகவதியம்மன் கோவில் உள்ளது. ஊரின் காவல் தெய்வங்கள் கொண்ட இக்கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் கொண்டாடப்படுவது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டும் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கிய இத்திருவிழா வெகுவிமர்ச்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக அம்மன் பூங்கரகத்தில் எழுந்தருளி தாரை தப்பட்டை வான வேடிக்கைகள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் தொடர்ந்து ஏராளமான பெண்கள் மாவிளக்கு, தீச்சட்டி, பால்குடம் எடுத்து நேற்றிக் கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து மாலை பொங்கல் வைக்கும், கிடாய் வெட்டும் வைபவமும் நடைபெற்றது.

1

இத்திருவிழாவில் கோவிலின் பாரம்பரியத்தை குறிக்கும் வகையில் அம்மனுக்கே ஆதார் கார்டு அடித்து வைக்கப்பட்டிருந்த பேனர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த பேனரில் முத்தாலம்மன், காளியம்மன், பகவதியம்மன், கன்னிமார், நாகம்மாள், வெற்றி விநாயகர் ஆகிய தெய்வங்களின் படங்கள் இருந்தன. மேலும் அந்த தெய்வங்களின் பிறந்த தேதியில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட வருடம் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுமட்டுமின்றி வட்டம், மாவட்டம், ஆதார் எண், இணையதள முகவரி, பார்கோடு மற்றும் ஆதாரம் எங்க ஊரு, எங்க ராஜ்ஜியம் என்று அச்சிடப்பட்டிருந்தது. 6 தெய்வங்களின் ஆதார் அட்டைகளை ஒருங்கிணைத்து பேனர் வைக்கப்பட்டிருந்தது. விழாவுக்கு வந்த அனைத்து பக்தர்களின் கவனத்தையும், ஆதார் போல் இடம் பெற்றிருந்த வினோத பேனர் ஈர்த்தது.

Trending News

Latest News

You May Like