1. Home
  2. தமிழ்நாடு

ரஜினிகாந்திற்கு பிஎம்டபிள்யூ காரை பரிசாக கொடுத்த கலாநிதி மாறன்..!

1

தமிழ் சினிமாவில் தற்போதெல்லாம் ஒரு திரைப்படம் ஹிட் ஆகிவிட்டது என்றால் அந்தப் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் அல்லது இயக்குநருக்கு தயாரிப்பாளர் விலை உயர்ந்த கார், பைக், வாட்ச் உள்ளிட்ட பொருட்களை பரிசாக வழங்கி வருகிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வெற்றி அடைந்த நிலையில் படத்தில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், ரஜினிகாந்த்திற்கு விரல உயர்ந்த ஆடம்பர கார் ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறார்.

இது தொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கும் பதிவில், “ஜெயிலர் சக்சஸ் கொண்டாட்டம் தொடர்கின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பல்வேறு கார் மாடல்கள் காண்பிக்கப்பட்டது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், BMW X7 காரை தேர்வு செய்தார். கலாநிதி மாறன், ரஜினிகாந்த் தேர்வு செய்த காரின் சாவியை அவரிடம் வழங்கினார் “ என குறிப்பிடப்பட்டு உள்ளது.

முன்னதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கலாநிதி மாறன், ரஜினிகாந்திடம் வசூலில் ரஜினிகாந்தின் பங்கை காசோலையை வழங்கினார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

முதற்கட்டமாக ஜெயிலர் திரைப்படம் 350 கோடியை தாண்டிவிட்டதாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம், இரண்டாம் கட்டமாக 500 கோடியை தாண்டிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


 


 

Trending News

Latest News

You May Like