1. Home
  2. தமிழ்நாடு

கலைமாமணி விருது பெற்ற விகேடி பாலன் காலமானார்..!

1

விகேடி பாலன் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 1954 ஆம் ஆண்டு பிறந்தவர். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். 1981 ஆம் ஆண்டு சென்னை வந்த அவர், தங்க வீடின்றி எழும்பூர் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் வசித்தார். டிராவல் ஏஜென்சியில் வேலை பார்த்து தொழில் நுணுக்கங்களை கற்று, 1986ல் டிராவல் ஏஜென்சி தொடங்கிய அவர், மதுரா டிராவல்ஸ் என்ற பெயரில் பயணம் மற்றும் சுற்றுலா சேவை நிறுவனத்தை இயக்கி வந்தார்.

சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து வாழ்க்கை தேடி சென்னைக்கு வந்த பாலன், தமது திறமையாலும், அயராத உழைப்பாலும் உயர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்க்கை கொடுத்தவர். தொழிலதிபரான விகேடி பாலன், தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

தென்னிந்தியாவின் மிக முக்கியமான பயண முகவர்களில் ஒன்றாக வி.கே.டி.பாலன் அவர்களின் மதுரா ட்ராவல்ஸ் விளங்குகிறது. விகேடி பாலனின் பேச்சுகள் ஏராளமானோருக்கு உந்துசக்தியாக இருந்து வரும் நிலையில், அவர் இன்று மறைந்துள்ளது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like