கோவையில் கலைஞரின் 102வது பிறந்தநாளை கொண்டாடிய அன்பு உடன் பிறப்புக்கள்.!
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், முன்னாள் தமிழ் நாடு முதலமைச்சருமான மு. கருணாநிதி அவர்களின் 102வது பிறந்தநாள் இன்று மாநிலம் முழுவதும் தி.மு.க.வினரால் கொண்டாடப்படுகிறது.
மேடை பேச்சு, கவி துறை, திரை வசனம், பத்திரிகை துறை என பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கிய மு. கருணாநிதி, அரசியலில் மிக கூர்மை கொண்ட ஆளுமையாக திகழ்ந்தார். சட்டமன்ற தேர்தலில் 13 முறை போட்டியிட அவர் ஒருமுறை கூட தோல்வியை தழுவியது கிடையாது. 5 முறை (1969-1971, 1971-1976, 1989-1991, 1996-2001 மற்றும் 2006-2011) முதலமைச்சராக இருந்த கருணாநிதி தற்போது நாம் காணும் நவீன தமிழ்நாடை உருவாக்கியவர் என பலராலும் இன்றும் போற்றப்படுகிறார். தமிழுக்காக தன்னை முழுமையாக அர்பணித்துக்கொண்ட ஒரு கலைஞராகவும், தமிழ் மக்களின் நலனுக்காக உழைத்த மக்கள் தொண்டராகவும் இருந்தவர் மு. கருணாநிதி.
அவரின் 102ம் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் திமுக சார்பில் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாநகராட்சி மேயர் ரங்கநாயகி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்று கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் கலைஞர் பிறந்த நாளை ஒட்டி பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.