1. Home
  2. தமிழ்நாடு

கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்..!முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!

Q

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் – பத்மாவதி தம்பதியரின் மூத்த மகன் மு.க.முத்து. இவர் பூக்காரி, அணையா விளக்கு, பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன் என பல படங்களில் நடித்துள்ளார்.  

நடிப்பு மட்டும் இல்லாமல் படங்களில் சில பாடல்களையும் பாடியுள்ளார். இவரின் ’நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா’, ’சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க’ ஆகிய பாடல்கள் மக்களால் மிக விரும்பப்பட்டவை.

இந்த நிலையில் 77 வயதான மு.க. முத்து உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்.

அவரது உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது

.அவரது உடலுக்கு முதலமைச்சரும், மு.க. முத்துவின் சகோதரருமான மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார். அவரது மறைவைத் தொடர்ந்து இன்று (ஜூலை 19) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Trending News

Latest News

You May Like