1. Home
  2. தமிழ்நாடு

இன்பநிதிக்கு கலைஞர் 'டிவி'யில் முக்கிய பொறுப்பு..?

Q

ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் நிதி நிர்வாகம் தொடர்பான பட்டப் படிப்பை இன்பநிதி முடித்துள்ளார். கடந்த 3ம் தேதி, தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் 'டிவி' அலுவலகத்திற்கு, இன்பநிதியை அவரது தாய் கிருத்திகா அழைத்து வந்தார்.

முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்காவின் சகோதரி மகன் கார்த்திகேயன், அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக தற்போது இருக்கிறார். அவரது அறையில் அமைக்கப்பட்ட அலுவலகத்தில், மகன் இன்பநிதியை அமர வைத்து, அவருக்கு கிருத்திகா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிறுவனத்தின் நிதி நிர்வாகப் பணிகள் குறித்து, அங்கு பணியாற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் தினமும் இன்பநிதி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து தினமும் காலை 11:00 மணிக்கு அலுவலகம் வரும் இன்பநிதி, மாலை 5:30 மணி வரை பணி புரிவதாக தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like