கண்ணீருடன் கலா மாஸ்டர் வெளியிட்ட வீடியோ..!

ஷிஹான் ஹுசைன் கராத்தே மாஸ்டராக பல நடிகர்களுக்கும் பல மாணவர்களுக்கும் பயிற்சி அளித்திருக்கிறார். அதுபோல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். புன்னகை மன்னன் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பிறகு வேலைக்காரன், மூங்கில் கோட்டை, பத்ரி, காத்து வாக்குல ரெண்டு காதல் உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.
அதுபோல பல மாணவர்களுக்கு வில்வித்தை மற்றும் கராத்தே பயிற்சி அளித்து கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் பல நடிகர்களும் இவரிடம் கராத்தே பயிற்சி எடுக்கிறார்கள். நடிகர் விஜய் கூட பத்ரி படத்திற்காக இவரிடம் தான் கராத்தே பயிற்சி முறையாக கற்றுக் கொண்டாராம். இவருக்கு ரத்த புற்றுநோய் பாதிக்கப்பட்டு இருப்பதை தெரிந்ததும் டாக்டர்கள் நீங்கள் 10 நாட்கள் தான் உயிரோடு இருப்பீர்கள் என்று அதிர்ச்சிகரமான விஷயத்தை சொல்லி இருந்தனர்.ஆனாலும் சிரித்த முகமாக அதை ஏற்றுக் கொண்டார். கடந்த இரண்டு வாரங்களாக அவர் தன்னுடைய கடைசி ஆசைகள் ஒவ்வொன்றையும் சொல்லிக் கொண்டே இருந்தார்.
இந்நிலையில் கடந்த 22 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, ஷிஹான் ஹுசைனி நேற்று முன்தினம் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், கலா மாஸ்டர் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், காலையில் எழுந்ததும் ஒரு அதிர்ச்சியான செய்தி, ஹுசைனி உயிரிழந்த செய்தி கேட்டு நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். அவரிடம் எனக்கு பிடித்த விஷயம், அவரின் தைரியம் தான், எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று எப்போதும் பேசுவார். நான் அசிஸ்டன்டாக வேலை பார்த்ததில் இருந்தே எனக்கு ஹுசைனியை நன்றாக தெரியும், என்னுடைய நடனப்பள்ளியின் முதல் மாணவர் அவர். ரொம்ப நல்ல மனுஷன். எனக்கு ஒன்னுனா எந்த நேரமாக இருந்தாலும் ஓடி வருவாரு, எங்க பார்த்தாலும் ஓடி வந்து பேசுவார்.
அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விபட்டதும், போன் பண்ணி பேசி பார்க்க வருகிறேன் என்று கேட்டேன். ஆனால், அவர் வேண்டாம் கலா, உனக்கு இன்ஃபெக்ஷன் ஆகிவிடும் என்று சொல்லிவிட்டதால், நான் பார்க்கவில்லை. ஆனால், தினமும் அவருக்கு போன் செய்து, ஹுசைனியின் காதில் இந்த மந்திரம் சொல்லுங்க எல்லாம் சரியாக விடும் என்று சொன்னேன். அப்போது அவர், ஐசியூவிற்கு போனா திரும்பி வருவேனா என்று தெரியாது என்று கூறியிருந்தார். அதே போல ஐசிவிற்கு போனவர் திரும்பி வரவே இல்லை. ஐ மிஸ் யூ ஹுசைனி என கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு இருந்தார்.