காஜல் நடித்த படம் ஓடிடியில் ரிலீஸ் என அறிவிப்பு.!

காஜல் நடித்த படம் ஓடிடியில் ரிலீஸ் என அறிவிப்பு.!

காஜல் நடித்த படம் ஓடிடியில் ரிலீஸ் என அறிவிப்பு.!
X

இந்தியில் 2013ம் ஆண்டு  கங்கனா ரணவத் நடிப்பில்  வெளிவந்து ஹிட் அடித்த திரைப்படம் ‘குயின்’.  அந்தப்படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என  தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

தமிழில் காஜல் அகர்வால் நடிக்க ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார்.. ‘பாரீஸ் பாரீஸ்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப்படத்திற்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். 

தெலுங்கு ரீமேக்கான  ‘தட் இஸ் மகாலட்சுமி’யில் தமன்னா நடிக்க,  மலையாளத்தில் மஞ்சிமா மோகன் நடிக்கிறார். இதற்கு ‘ஜம் ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘பட்டர்பிளை’  என்ற தலைப்பில் உருவாகியுள்ள கன்னட ரீமேக்கில் பருல் யாதவ் நடித்துள்ளார்..
 
இந்த 4 படங்களின் படப்பிடிப்பும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன. இந்தப்படங்கள் தயாராகி நிண்ட காலம் ஆகியும் ரிலீஸ் ஆகாததால், படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு குறைந்துவிட்டது. 

அதனால் தற்போது உள்ள சூழலில் படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்து வசூப் பார்ப்பது என்பது சவாலான காரியம் என்பதால், நான்கு மொழிப் படங்களையும் முன்னணி ஓடிடி தளத்திற்கு விற்றுவிட்டார்களாம்.

இந்த நான்குப் பதிப்புகளையும் அமேசான் ஓடிடி தளத்தில் நல்ல விலைக்கு வாங்கி விட்டதாகவும், விரைவில் படங்களில் ரிலீஸ் தேதி வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Next Story
Share it