நிஜ அழகுடன் காஜல் அகர்வால்..! வைரலாகும் போட்டோஸ்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். அவர் தமிழ் மொழிகளில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ,கன்னடம் என பல மொழிகளில் நடித்து பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் நடிப்புக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெரும். சமீபகாலமாக அவரது திருமணத்தைப் பற்றி சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தது. இவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கௌதம் என்பவருடன் காதல் இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. அதனை சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து உறுதி செய்தார். வருகிற 30ம் தேதி அதாவது இன்று அவருடைய திருமணம் என்று தெரிவித்திருந்தார் அதுபோக அவருடைய நிச்சயதார்த்த புகைப்படங்களையும் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இன்று அவர் திருமணம் என்பதால் அவருடைய திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி டிரண்ட் அடித்து வருகின்றது. அவருடைய கல்யாணத்திற்கு நெருங்கிய சொந்தங்கள் நெருங்கிய நண்பர்கள் மட்டும் அழைப்பு விடுப்பதாக அவர் தெரிவித்திருந்தார். கொரோனா வைரஸ் காரணமாக உரிய நபர்களை வைத்து மட்டுமே இந்த திருமணம் நடைபெற உள்ளது.
இதனால் காஜல் அகர்வால் உடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது வெளியாகியிருக்கும் இந்த திருமண புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் அடித்து வருகிறது. இதோ இந்த புகைப்படம் உங்களுக்காக.