1. Home
  2. தமிழ்நாடு

பாமக வை காலி பண்ணிடுவேன்... உதயநிதி ஸ்டாலினை சந்தித்த காடுவெட்டி குரு மகன்!

பாமக வை காலி பண்ணிடுவேன்... உதயநிதி ஸ்டாலினை சந்தித்த காடுவெட்டி குரு மகன்!


திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் சந்தித்து பேசியுள்ள நிகழ்வு பாமக வட்டாரத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வன்னியர் சங்கத் தலைவராக வலம் வந்தவர் மாவீரன் காடுவெட்டி குரு. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மிகவும் நம்பிக்கைப் பெற்றவர். இதனால், டாக்டர் அன்புமணிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட காடுவெட்டி குருவுக்கு வழங்கி வந்தார். இதனாலே கட்சிக்குள் சில நேரம் புகைச்சல் கூட கிளம்பியது.

இந்த நிலையில், காடுவெட்டி குரு மறைந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கும், பாமக இடையே மோதல் வெடித்தது. இதனால், ராமதாசுக்கு எதிரான நிலைப்பாட்டில் கனலசரன் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், குருவின் மகனுமான கனலரசனை பாஜக பக்கம் இழுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை சென்னையில் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் சந்தித்து பேசியுள்ளார். அப்போது சில கோரிக்கைகளை கனலசரன் வைத்துள்ளதாகவும், அதேபோல, அவருக்கு உதயநிதி தரப்பில் சில வாக்குறுதிகளும் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சந்திப்பு பாமகவுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Trending News

Latest News

You May Like