ராமதாஸ் உயிருக்கு ஆபத்து: அன்புமணி மீது காடுவெட்டி குரு உறவினர் விஜிகே மணிகண்டன் பகீர் குற்றச்சாட்டு..!

காடுவெட்டி ஜெ.குருவின் உறவினரும், மாவீரன் வன்னியர் சங்கத்தின் நிறுவனருமான வி.ஜி.கே.மணிகண்டன், மயிலாடுதுறையில் செய்தியாளர்களுக்கு இன்று மே 29-ல் அளித்த பேட்டி:
பாமகவை வழி நடத்தும் பக்குவமும், தலைமைப் பண்பும் அக்கட்சியை உருவாக்கிய டாக்டர் ராமதாசுக்கு மட்டுமே உள்ளது. குறுகிய காலத்தில் அன்புமணி ராமதாஸ், பாமகவைக் கைப்பற்ற முயல்கிறார்.
வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி ஜெ.குரு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோது, அவர் வெளிநாடு சென்று மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் தடுத்தவர் அன்புமணி ராமதாஸ். இதனை டாக்டர் ராமதாஸ் விரைவில் ஒப்புக் கொள்வார்.
அன்புமணியின் பின்னால் செல்பவர்களுக்கே எதிர்காலத்தில் அரசியல் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பதால்தான் பலர் அவரை ஆதரிக்கின்றனர். எனக்கு பாமகவை பிடிக்காது. இருந்தாலும் நான் டாக்டர் ராமதாஸை ஆதரிக்கிறேன். ஏனென்றால் அன்புமணிக்கு உழைக்கத் தெரியாது.
டாக்டர் ராமதாஸின் உயிருக்கு அன்புமணியின் குடும்பத்தால் ஆபத்து உள்ளது. இவ்வாறு வி.ஜி.கே.மணிகண்டன் தெரிவித்தார்.