திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜோதிகா சாமி தரிசனம் !
சூர்யா அடுத்ததாகக் கார்த்தி சுப்பராஜ் இயக்கியுள்ள சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து ஆர்.ஜேப்பாலாஜி இயக்கும் சூர்யா 45 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் 30 ஆம் தேதி தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து கர்நாடகாவில் உள்ள மூகாம்பிகை கோவிலில் சாமி தரிசனம் செய்திருப்பதுடன் சிறப்பு யாகமும் நடத்தியுள்ளனர். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில், நடிகை ஜோதிகா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். சாமி தரிசனம் செய்துவிட்டு வந்த நடிகை ஜோதிகா ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது, ரசிகர் ஒருவர் அன்புடன் கொடுத்த ஏழுமலையான் படத்தைப் பெற்றுக்கொண்டார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.