ஜோதிகா ஒரு முஸ்லிம்... திருப்பதியில் அவரை எப்படி தரிசனம் செய்ய அனுமதித்தனர்..? பயில்வான் ரங்கநாதன்..!
சூர்யாவின் கேரியரிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படம் கங்குவா. இந்தப் படத்தின் தோல்வி சூர்யாவை வெகுவாக பாதித்துள்ளது. இதனால் அவர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
இந்த நிலையில், தனது மனைவி ஜோதிகாவுடன் சூர்யா கோவில் கோவிலாக சுற்றி வருவது தொடர்பில் பிரபல பத்திரிகையாளரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி அளித்துள்ளார்.
அதன்படி அவர் கூறுகையில், கடந்த மூன்று வருடமாகவே சூர்யா நடிப்பில் எந்த ஒரு படமும் வெற்றி படமாக அமையவில்லை. எதற்கும் துணிந்தவன் படத்தில் ஆக்சன் ஹீரோவாக நடித்தார். ஆனால் அது தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு கடும் உழைப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் தான் கங்குவா.
இந்த படத்தை சிறுத்தை சிவா மிக மோசமாக எடுத்த காரணத்தினால் தான் கடுமையான விமர்சனங்கள் கிடைத்தது. படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய் என ஞானவேல் ராஜா கூறியிருந்தார். ஆனால் அந்தப் படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. சூர்யாவின் நிலைமை தொடர்ந்து சரி இல்லை. அவருக்கு ஏழரை சனி தொடங்கி விட்டது என்று கூறுகின்றார்கள்.
இல்லை என்றால் அவருக்கு யாராவது செய்வினை வைத்து விட்டார்களா? அல்லது அவருடைய வளர்ச்சி பிடிக்காதவர்கள் செய்யும் சதியா? என்னவென்று தெரியவில்லை. சூர்யாவும் ஜோதிகாவும் சண்டியாகத்திற்கு ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். இதற்கு முன்பு சிறுத்தை சிவா உடன் சூர்யா நரசிம்மன் கோயிலுக்கு சென்று அங்கு வழிபாடு செய்திருந்தார்.
சூர்யா இழந்த புகழையும் பெயரையும் திரும்ப பெற வேண்டும் என்பதற்காகவே அவர்கள் தம்பதிகளாக சென்று வழிபாடு செய்து வருகின்றார்கள். அதன் பின்பு ஜோதிகா, திருப்பதி கோயிலுக்கு தனியாக சென்றுள்ளார். சென்னைக்கு வந்த அவர் மாமனார் மாமியாரை சந்திக்க வேண்டும் என்பதற்காகவே கணவரையும் அழைத்துச் செல்லாமல் தனியாக சென்றுள்ளார்.
பிறப்பால் ஜோதிகா ஒரு முஸ்லிம். ஆனால் திருப்பதியில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் போது ஜோதிகா மட்டும் எப்படி சாமி தரிசனம் செய்தார் என தெரியவில்லை. ஒருவேளை அவர் இந்துவாக மாறிவிட்டாரா என்பதும் புரியவில்லை. கூடிய விரைவில் இருவரும் சண்டியாகம் செய்ய முடிவு எடுத்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.