1. Home
  2. தமிழ்நாடு

நாட்டையே உலுக்கிய சிறுமி வன்கொடுமை விவகாரம்: கைதுசெய்யப்பட்ட குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்..!

1

கும்முடிபூண்டியில் ஜூலை 12ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் பள்ளி முடிந்து 8 வயது சிறுமி ஒருவர் தனது பாட்டி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆரம்பாக்கம் ரயில் நிலைய பகுதிகள் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் சிறுமி சென்று கொண்டிருந்த பொழுது மர்மநபர் ஒருவர் சிறுமியை பின்தொடர்ந்து சென்று வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பின்னர் அந்த மர்ம நபரிடம் இருந்து தப்பிக்க கீழே இருந்த மணலை எடுத்து அவரின் முகத்தில் வீசிவிட்டு தப்பி ஓடி உள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியை கை ,கால், முகம் மற்றும் சட்டை கிழிந்த நிலைகள் அழுது கொண்டே வீட்டிற்கு வந்து உள்ளார்.இதனை கண்டு பதறிய அவரது பெற்றோர் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது, சிறுமி தனக்கு நேர்ந்த சம்பவங்களை கூறியுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

மேலும் ஆள் இல்லாத நேரம் பார்த்து வலுக்கட்டாயமாக சிறுமையை அடித்து இழுத்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.பின்னர் 14 நாட்கள் காவல்துறையின் தேடுதல் வேட்டைக்கு பிறகு நேற்று ரயில் நிலையத்தில் குற்றவாளியை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து குற்றவாளி ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட பிறகு பாதிக்கப்பட்ட சிறுமியிடம் அந்த குற்றவாளியை காட்டி காவல்துறையினர் உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து ஐஜி ,டிஎஸ்பி, காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது கைதான நபர் சிறுமியை வன்கொடுமை செய்ததாக வாக்குமூலம் கொடுத்தார்

Trending News

Latest News

You May Like