1. Home
  2. தமிழ்நாடு

ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசு வெற்றி..!

Q

கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான, சிறுபான்மை லிபரல் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு ஜக்மீத் சிங் தலைமையில் புதிய ஜனநாயகக் கட்சி செயல்படுகிறது. இந்த கட்சிக்கு 24 எம்.பிக்கள் உள்ளனர். இவ்வளவு காலமாக ட்ரூடோவுக்கு ஆதரவு தெரிவித்து வந்தது. சமீபத்தில், புதிய ஜனநாயகக் கட்சி, ட்ரூடோ தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதாக அறிவித்தது. இதனால் ட்ரூடோ எதிர்பாராத அடியை சந்தித்தார்.

இந்நிலையில், கனடா பார்லிமென்டில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. நம்பிக்கை தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு 338 பார்லிமென்ட் உறுப்பினர்களில் பெரும் பான்மையினரின் ஆதரவு தேவை.

ட்ரூடோ தலைமையிலான அரசை, அவரது கட்சி எம்.பி.,க்கள் 154 பேர் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.,க்கள் உட்பட 211 பேர் ஆதரவாக ஓட்டளித்தனர். இதில் ஆதரவை வாபஸ் பெற்ற புதிய ஜனநாயக கட்சி சேர்ந்த எம்.பி.,க்களும் அடங்குவர். 120 பேர் மட்டும் எதிராக ஓட்டளித்தனர். இதனால் நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.

Trending News

Latest News

You May Like