1. Home
  2. தமிழ்நாடு

#JUSTIN டீசல் டேங்கர் ரயிலில் தீ - மேலும் 4 ரயில்கள் ரத்து..!

Q

திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் சரக்கு ரயில் தீ விபத்தால் மேலும் 4 ரயில்கள் ரத்து.

திருவள்ளூர் அருகே எரிபொருள் ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் என்ஜினில் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிகிறது.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தீவிரமாக போராடி வருகிறார்கள். இவ்விபத்து காரணமாக அரக்கோணம் செல்லும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் சென்னை துறைமுகத்தில் இருந்து எரிபொருள் ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
4 ரயில்கள் ரத்து :
கோவையில் இருந்து இன்று பிற்பகல் சென்னை புறப்பட வேண்டிய சதாப்தி உள்ளிட்ட இரு ரயில்கள் ரத்து
சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு புறப்பட வேண்டிய இன்டர்சிட்டி, வந்தே பாரத் ரயில்களும் ரத்து
கோவையில் இருந்து சென்னை செல்லும் வந்தே பாரத், இன்டர்சிட்டி ரயில்கள் சேலம் வரை மட்டுமே இயக்கம்
மங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் ரயில் காட்பாடி வரையே இயக்கப்படும்

Trending News

Latest News

You May Like