1. Home
  2. தமிழ்நாடு

சர்ச்சையில் சிக்கிய யஷ்வந்த் அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதியாக பதவியேற்பு..!

Q

கடந்த மாதம் ஹோலி பண்டிகையின்போது யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. யஷ்வந்த் வர்மா வெளியூர் சென்ற நிலையில் அவரது குடும்பத்தினர் தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப்படையினர் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைந்தனர். அப்போது, நீதிபதியின் வீட்டில் உள்ள பல்வேறு அறைகளில் கட்டு கட்டாக பணம் இருப்பதை கண்டு தீயணைப்பு வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர். தீ விபத்தின்போது கட்டு கட்டாக பணம் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் இது குறித்து சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. மேலும், நீதிபதி யஷ்வந்த் வர்மா டெல்லி ஐகோர்ட்டில் இருந்து அலகாபாத் ஐகோர்ட்டிற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், பணியிடமாற்றம் செய்யப்பட்ட யஷ்வந்த் வர்மா அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதியாக இன்று பதவியேற்றார். நீதிபதியாக பதவியேற்றபோதும் வீட்டில் பணம் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக நடைபெற்றுவரும் விசாரணை தொடர்பாக அக்குழு அறிக்கை சமர்பிக்கும்வரை யஷ்வந்த் வர்மா எந்த வழக்கையும் விசாரிக்க மாட்டார் என்றும் அவருக்கு நீதிமன்ற பணிகள் ஒதுக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like