1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : வெளியான தக் லைஃப் படத்தின் டிரெய்லர்..!

Q

மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் திரைப்படத்தில் கமல் ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லஷ்மி, அசோக் செல்வன், அபிராமி, நாசர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

Thug Life திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான RKFL, ரெட் ஜெயண்ட் மூவீஸ், மதராஸ் டாக்கீஸ் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 

மே 17 2025 மாலை 5 மணிக்கு தல் லைஃப் ட்ரெய்லர் வெளியீடு

மே 24 2025-ல் ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் குழுவின் இசைக்கச்சேரியுடன் சென்னை சாய்ராம் கல்லூரியில் தக் லைஃப் இசை வெளியீடு.

ஜூன் 5 - ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியீடு" என்பதைக் குறிப்பிட்டுள்ளனர்.

நாயகன் திரைப்படத்துக்குப் பிறகு மணிரத்னம் மற்றும் கமல் ஹாசன் இணைவதனால் இந்த திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தக் லைப்' திரைப்படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' பாடல் வெளியிடப்பட்டது மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணி வெளியாகிறது. ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

இதோ அந்த படத்தின் ட்ரைலர் உங்களுக்காக 

Trending News

Latest News

You May Like