1. Home
  2. தமிழ்நாடு

கொஞ்சம் யோசிங்க..! உயிரை விட ரீலிஸ் உங்களுக்கு பெருசா ? ரயில் முன் ரீல்ஸ் செய்தபோது நிகழ்ந்த சோகம்..!

1

 காவல் நிலையம், ரயில் நிலையம், ரயில்களில் முன்பு மற்றும் பேருந்துகளை நிறுத்தி ரீல்ஸ் எடுக்கும் கலாச்சாரம் இந்தியாவில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இப்படி எடுப்பதால் பல பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க நேரிகிறது. மேலும் பல சர்ச்சைகளும் எழுந்து வருகிறது.

இதுவே சில நேரங்களில் அவர்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கிறது. இவ்வாறு ரீல்ஸ் செய்யும் போது சில விபரீதங்கள் ஏற்பட்டு சில பேருக்கு உடல் உறுப்புகள் சேதமடைந்ததோடு, சில பேர்களுக்கு உயிரே பறிபோகும் நிலை உண்டாக்குகிறது. தற்போது இதுபோன்ற செயல்களுக்கு அனைவரும் அடிமையாகி விட்டனர் என்றே சொல்லலாம். 

dead-body

இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் ஜஹாங்கிராபாத்தில் அமைந்துள்ள பாரபங்கி பகுதியை சேர்ந்தவர் ஃபர்மான் (14). இவர் அடிக்கடி ரீல்ஸ் செய்து சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி வருவார். இந்த சூழலில் சம்பவத்தன்று இவரும், இவரது நண்பர்களான ஷுஐப், நாதிர் மற்றும் சமீர் ஆகியோர் அருகில் ஒரு ஊர்வலத்தைக் காணச் சென்று கொண்டிருந்தனர்.

அபோது தாமேதர்பூர் கிராமத்தை ஒட்டியுள்ள தண்டவாளத்தை கண்டதும் இவர் ரீல்ஸ் செய்ய எண்ணியுள்ளார். அதன்படி அருகில் சென்று அவர் ரயில் தண்டவாளத்தின் அருகே சென்று நடக்கவே, பின்னால் இருந்து வேகமாக வந்த ரயில் அவர் மீது சட்டென்று மோதி, அவரை தரதரவென இழுத்து சென்றது. இதில் சிறுவன் ஃபர்மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி அனைவர் மத்தியிலும் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


 

Trending News

Latest News

You May Like