#JUST IN : ராஜினாமா செய்தார் பேடிஎம் தலைவர் விஜய் சேகர் சர்மா..!
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி விதிமுறைகளை மீறியதாகக் குற்றஞ்சாட்டியுள்ள ரிசர்வ் வங்கி, அந்நிறுவனம் வரும் பிப்ரவரி 29 முதல் அதன் சேவைகளை நிறுத்திக் கொள்ள உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து அனைத்து இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பான சிஏஐடி வர்த்தகர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது நாட்டில் இருக்கும் அனைத்து வர்த்தகர்களும் பேடிஎம் செயலியில் இருந்து மற்ற செயலிகளுக்கு மாறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
தொடர்ந்து, பேடிஎம் அதன் செயல்பாடுகளை மார்ச் 15 ஆம் தேதிக்குள் நிறுத்துமாறு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
அந்நிய முதலீடுகள் தொடா்பான விதிமுறைகளை பேடிஎம் பேமென்ட் வங்கி கடைப்பிடிக்காததையடுத்து, அந்த வங்கி பிப்ரவரி 29-ஆம் தேதிக்குப் பிறகு வாடிக்கையாளா்களிடம் இருந்து பணத்தைப் பெறுவதற்கு இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தடைவித்திருந்தது.
இந்நிலையில் பேடிஎம் (Paytm) பேமெண்ட் வங்கி பிரிவின் தலைவர் மற்றும் குழு உறுப்பினர் பதவியில் இருந்து திங்கள்கிழமை (பிப்.26,2024) விஜய் சேகர் சர்மா தனது ராஜினாமா செய்துள்ளார்.