1. Home
  2. தமிழ்நாடு

வெறும் 210 ரூபாய் கட்டினால் போதும்... மாதந்தோறும் ரூ. 10,000 தரும் பென்ஷன் திட்டம்..

1

தொழிலாளர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த தனிநபர்களுக்கான, மாதாந்திர ஓய்வூதிய திட்டமாக அடல் பென்ஷன் யோஜனா செயல்பட்டு வருகிறது.

கடந்த 2015-16 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டஅது 'அடல் பென்ஷன் யோஜனா' திட்டம். இத்திட்டத்தின் மூலமாக ஒருவர் ரூ. 5000 வரை மாதந்தோறும் பென்ஷனாக பெற முடியும்.

இத்திட்டத்தில் 18 வயது முதல் 40 வயதுக்குள் இருப்பவர்கள் மட்டுமே சேர முடியும். இத்திட்டத்தில் ஒருவர் ரூ.210 மாத மாதம் செலுத்த வேண்டும். தொடர்ந்து 18 ஆண்டுகள் இப்பணத்தை முதலீடு செய்யும் போது ஓய்வுக்கு பிறகு ரூ.5000 மாத வருமானம் கிடைக்கும். தம்பதிகள் இருவரும் இணையும்போது மாத வருமானம் ரூ.10,000 வரை அதிகரிக்கும். ஆனால், இந்த பலனை முதலீட்டாளர்கள் 60 வயது பூர்த்தி அடைந்த பின்பே அனுபவிக்க முடியும்.

தினமும் வெறும் 7 ரூபாய் வீதம் மாதத்திற்கு ரூ. 210 என முதலீடு செய்தாலே போதும் 'அடல் பென்ஷன் யோஜனா' திட்டத்தின் பலனை பெறலாம். பிரீமியம் செலுத்துவதை பொறுத்து பென்சன் தொகை மாறுப்படும். அதிகமாக பிரிமீயம் செலுத்தும் போது ஒய்வூதிய தொகை அதிகரிக்கும். மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாயை ஓய்வூதியமாக பெறுவதற்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 626 டெபாசிட் செய்ய வேண்டும்.

6 மாதங்களுக்கு ஒருமுறை முதலீடு செய்யும் போது, ரூ. 1,239 செலுத்த வேண்டும். மேலும், மாதந்தோறும் ரூ.1,000 ஒய்வூதியமாக பெற விரும்பினால், ஒவ்வொரு மாதமும் ரூ.42 18 வயதில் இருந்தே செலுத்த வேண்டும்.
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் ஒருவேளை சந்தாதாரர் எதிர்பாராமல் இறந்து விட்டால், அவரின் வாழ்க்கை துணைக்கு பென்ஷன் தொகை வழங்கப்படும்.

ஒருவேளை இருவருமே இறந்து விட்டால், முதலீட்டாரின் நாமினி பென்ஷன் தொகையை பெறலாம். பொதுத்துறை, தனியார் வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் அடல் பென்ஷன் திட்டத்தில் கணக்கை துவங்கலாம். ஆதார் கார்டு போன்ற ஆவணங்களை சமர்பித்து வங்கிக்கணக்கு ஆரம்பிக்கலாம். மேலும், 'அடல் பென்ஷன் யோஜனா' திட்டத்தில் கூடுதலாக பணம் செலுத்தி, பென்ஷன் தொகையை அதிகரித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like