#JUST IN : பிரபல இசையமைப்பாளர் கோபி சுந்தரின் தாயார் காலமானார்..!

பெங்களூர் டேஸ், புலி முருகன் என பல ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர் கோபி சுந்தர். இது தவிர தமிழ் மற்றும் தெலுங்கிலும் குறிப்பிடத்தக்க படங்களில் இசையமைத்து வருகிறார். குறிப்பாக தற்போது தெலுங்கு திரையுலகில் தான் அதிக படங்களில் இசையமைத்து வருகிறார். இவர் ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை விட்டு பிரிந்தவர்.
இந்நிலையில் இசையமைப்பாளர் கோபி சுந்தரின் தாயார் லிவி சுரேஷ் பாபு (65) திருச்சூரில் இன்று (ஜன., 30) காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் 3 மணிக்கு வடூக்கரை மயானத்தில் நடைபெறும். கோபி சுந்தரின் குடும்பத்தினருக்கு திரையுலகினர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். கோபி சுந்தர் தமிழில் பொய் சொல்ல போறோம், யாருடா மகேஷ், பெங்களூர் நாட்கள், தேவி, ஸ்கெட்ச், வேலன், நித்தம் ஒரு வானம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.