ஜஸ்ட் மிஸ்..! நூலிழையில் உயிர் தப்பிய சவுரவ் கங்குலி மகள்...!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. இவரது மனைவி டோனா. இந்த தம்பதியருக்கு சனா என்ற மகள் உள்ளார். தற்போது 23 வயதாகும் சனா, லண்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பட்டப்படிப்பை முடித்து, ஒரு சிறந்த நிறுவனத்தில் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் சனா பயணித்த கார் கொல்கத்தா டயமண்ட் ஹார்பர் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது கங்குலியின் மகள் சென்ற கார் மீது பின்னால் இருந்து வந்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்று மோதியது. இதில் சனாவுக்கு பெரிய காயம் ஏதும் ஏற்படவில்லை. விபத்தை தொடர்ந்து பஸ் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால், கார் டிரைவர் அவரை துரத்திச் சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தார். மேலும் காருக்கு பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், இது தொடர்பாக கங்குலியின் மகள் புகார் எதுவும் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவம் இன்று தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த விபத்தை தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் கங்குலியை தொடர்பு கொண்டு மகள் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.