தெறி பேபியா இது… என்னமா வளந்துட்டாங்க! அடுத்து ஹீரோயின் தான் போல!!

நடிகை மீனாவின் மகள் நைனிகாவின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மீனா தனது மகள் நைனிகாவையும் தன்னைப் போன்றே குழந்தை நட்சத்திரமாக ‘தெறி’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். இந்தப்படம் மூலம் தெறி பேபி என்று அறியப்பட்டார் நைனிகா. அதுமட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக மாறிப்போனார்.
அதனைத் தொடர்ந்து அரவிந்த்சாமி உடன் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற படத்தில் தனது க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தினார் நைனிகா.
இந்நிலையில் தற்போது மகள் நைனிகாவின் சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை மீனா. அதில் புகைப்படத்தில் நன்றாக வளர்ந்து காணப்பட்டார் நைனிகா. இந்தப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
newstm.in