#JUST IN : தொண்டர்களை சந்தித்தார் விஜயகாந்த்..!

2005-ம் ஆண்டு தேமுதிக தொடங்கப்பட்ட பிறகு 2006-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் விஜயகாந்த் பிறந்தநாளை 'வறுமை ஒழிப்பு தினமாக' கடைப்பிடித்து வருகிறது. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் அவர்களால் முடிந்த அளவிற்கு மக்களுக்கான நல உதவிகளை 'இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே' என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து, ஒவ்வோரு ஆண்டும் விஜயகாந்த் வழியை பின்பற்றி செய்து வருகிறார்கள்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று, அவர்களின் வறுமையை ஒழிக்கும் முயற்சியில் தே.மு.தி.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. வறுமை ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மலர வேண்டும் என்பதே விஜயகாந்த்தின் குறிக்கோள்.
இந்நிலையில், தேமுதிக தொண்டர்கள் இன்று காலை முதலே பெரும் உற்சாகத்துடன் தேமுதிக தலைமை அலுவலகத்தில் கூடத் தொடங்கினர். அதன்படி தேமுதிக கட்சித் தலைமை அலுவலகத்தில் எல்.இ.டி திரை வைத்து , கலை நிகழ்ச்சிகளுக்கும் நடைபெற்று வரும் நிலையில், விஜயகாந்த் பட பாடல் வரிகளுக்கு ஏற்ப தொண்டர்கள் நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தன் ரசிகர்களை விஜயகாந்த் இன்று தன் கட்சி அலுவககத்தில் சந்தித்து வருகிறார்.