#JUST IN : விஜய பிரபாகரன் முன்னிலை..!

விருதுநகரில் அதிமுக கூட்டணியான தேமுதிகவின் வேட்பாளர் விஜய பிரபாகரன் முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸின் மாணிக்கம் தாகூர், பாஜகவின் ராதிகா சரத்குமார் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளார். தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் சந்திக்கும் முதல் தேர்தல் இது.
நீலகிரி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான எல்.முருகன், அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், நாதக வேட்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முன்னிலை வகிக்கிறார். அதிமுக வேட்பாளர் தங்கவேல் மற்றும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் செந்தில்நாதன் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.