#JUST IN : மருத்துவமனைக்கு விரைந்தார் விஜய்..! பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் நேரில் ஆறுதல்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், கருணாபுரம் காலனியில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் 40 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைகள், மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் உடல் நிலை மோசமாக உள்ளதால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி, செங்கற்பட்டு, தஞ்சை மாவட்டங்களில் கள்ளச் சாரயம் அருந்தியதால் உயிரிழப்புகள் ஏற்பட்டன. தற்போது மீண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாரயத்தால் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கள்ளச் சாரய விற்பனையில் ஈடுபடும் சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என தங்கள் ஆதங்கத்தை கொடுக்க வந்தனர்.
முன்னதாக, தனது எக்ஸ் பக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்த விஜய், தற்போது கள்ளக்குறிச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூற சென்றிருக்கிறார். இதில் முதற்கட்டமாக விஷ சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை விஜய் நலம் விசாரித்து வருகிறார். மேலும், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.