1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : இடம் தேதியை அறிவித்தார் விஜய்... ஆகஸ்டு 25-ம் தேதி தவெக 2-வது மாநாடு..!

1

தவெக தலைவர் நடிகர் விஜய், கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலை கிராமத்தில் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்தினார்.தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி, மாநாட்டுக்கான பூமிபூஜை இன்று அதிகாலை நடைபெற்றது. 

 

இந்தநிலையில், தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தவெக 2-ம் மாநாடு மதுரையில் ஆகஸ்டு 25-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம்.தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன்.

வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம். நன்றி என பதிவிட்டுள்ளார்.

மாநாட்டிற்கு 70 முதல் 100 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2 நாட்களாக சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. பூமி பூஜை முடிந்து அடுத்தடுத்து பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

 



 

Trending News

Latest News

You May Like