1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : பேராசிரியை நிர்மலா தேவி வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு..!

Q

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகள் சிலரிடம் ஆசை வார்த்தை கூறி உயர்கல்வித்துறை முக்கிய நபர்களுக்கு பாலியல் ரீதியாக அவர்களை பயன்படுத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். நீண்ட நாட்கள் சிறையில் இருந்து வந்த நிலையில், ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பேராசிரியை நிர்மலா தேவி வழக்கின் தீர்ப்பு வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் கோரிக்கை வைத்த நிலையில், 29ஆம் தேதி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு தீர்ப்பை அன்றைய தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். குற்றம் சாட்டப்பட்ட மூவரில் நிர்மலா தேவி தவிர, ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மற்றும் பேராசிரியர் முருகன் இருவரும் ஆஜராகினர்.

Trending News

Latest News

You May Like