#JUST IN : வைபவ் சூர்யவன்ஷியை ரூ.1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ்..!
பீகாரை சேர்ந்த 13வ் வயது ஆன வைபவ் சூர்யவன்ஷி என்ற இளம் வீரர் ஐபிஎல் ஏலத்தில் இடம்பிடித்து அசத்தியுள்ளார். இடதுகை பேட்ஸ்மேனான இவர், ஏலப் பட்டியலில் ரூ. 30 லட்சம் ஆரம்பத் தொகைக்கு 491-வது வீரராகப் பட்டியலிடப்பட்டிருக்கிறார். இவர் முன்னதாக, இளம் கிரிக்கெட் வீரர், வரவிருக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை 2024க்கான இந்திய அணியில் இடம்பிடித்த பிறகு குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளார்.
12 வயதில் தனது 12 வயதில் வினு மங்கட் டிராபி தொடரில் பீகாருக்காகக் களமிறங்கிய வைபவ், ஐந்து போட்டிகளில் 400 ரன்கள் அடித்து அசத்தினார். தொடர்ந்து, 2023 நவம்பரில் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்தியா A, இந்தியா B அணி, இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு அணிகள் மோதும் தொடரில், இந்தியா B அணியில் இடம்பெற்றார். 2024 ஐசிசி U19 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்தத் தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சூர்யவான்ஷி 41 ரன்கள் அடித்தார். ஆனால், வங்கதேசம் மற்றும் இந்தியா A அணிகளுக்கெதிரான ஆட்டத்தில் 0, 8 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால், ஐசிசி U19 உலக கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற முடியாமல் போனது.
ரஞ்சியில் மொத்தமாக 5 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் சூர்யவான்ஷி 100 ரன்களை எடுத்திருக்கிறார். இதில், மத்தியப்பிரதேசத்துக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் 41 அடித்ததே இப்போதைக்கு ரஞ்சியில் இவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். மேலும், பந்து வீச்சில் ரஞ்சியில் இரண்டு ஆட்டங்களில் பந்துவீசி ஒரு விக்கெட் வீழ்த்தியிருக்கிறார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், சூர்யவன்ஷி 12 ஆண்டுகள் மற்றும் 284 நாட்களில் பீகாருக்கான மதிப்புமிக்க ரஞ்சி டிராபியில் அறிமுகமாகி, வரலாற்றில் எட்டாவது-இளைய முதல் தர கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 1986-க்குப் பிறகு ரஞ்சி டிராபியில் அறிமுகமான மிக இளம் வீரர் என்ற சிறப்பைப் பெற்றார். இந்த சாதனை அவரை இந்தியாவின் மிகவும் உற்சாகமான இளம் திறமையாளர்களில் ஒருவராக அடையாளம் காட்டியுள்ளது. ஆகஸ்ட் 2024 இல், ஆஸ்திரேலியா U-19க்கு எதிரான இளைஞர் தொடரில் சர்வதேச அரைசதம் அடித்த இளைய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். தற்போது பங்களாதேஷ் தேசிய அணியின் கேப்டனாக உள்ள நஜ்முல் ஹொசைன் சாண்டோவின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.
அதேபோல், கடந்த செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற இந்தியா U19 vs ஆஸ்திரேலியா U19 இளம் வீரர்கள் டெஸ்ட் போட்டியில், 58 பந்துகளில் சதமடித்துள்ளார். இதன்மூலம், இளம் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் இந்திய வீரர்களில் அதிவேக சதம் அடித்து அடித்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இது அவரது இரண்டாவது அதிவேக சதமாகும். இதற்கு முன் 2005-ல் இங்கிலாந்தின் மொயின் அலி இலங்கைக்கு எதிராக டெஸ்டில் 56 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.
சூர்யவன்ஷி இந்த இளம் வயதில் வளர்ச்சியடைந்தாலும், இவரில் இந்த கிரிக்கெட் பயணத்தில் சர்ச்சைகள் தொடர்கின்றன. செப்டம்பர் 2023 இல் அவர் 14 வயதை அடைவதாக ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. சூர்யவன்ஷி பிறந்த ஆண்டு 2011 என்ற அதிகாரப்பூர்வ பதிவுக்கு எதிராக இருந்தது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பிசிசிஐ மற்றும் பீகார் கிரிக்கெட் சங்கம் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் 13 வயதே ஆகும் வைபவ் சூர்யவன்ஷியை ரூ.1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி