1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : சிங்கமுத்துவிடம் ரூ.5 கோடி கேட்ட வடிவேலு - சிங்கமுத்து பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு!

1

பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் இதுவரை 300 படங்களுக்கும் மேல் நடித்து நகைச்சுவை நடிகராக உள்ளேன். நகைச்சுவை நடிகரான சிங்கமுத்துவும், நானும் கடந்த 2000-ம் ஆண்டு முதல் ஒன்றாக நடித்து வந்தோம். 2015-ம் ஆண்டுக்குப்பிறகு என்னைப்பற்றி மோசமாக விமர்சித்து வந்ததால் அவருடன் சேர்ந்து நடிப்பதைத் தவிர்த்தேன். தாம்பரத்தில் பிரச்சினைக்குரிய நிலத்தை அவர் எனக்கு வாங்கி கொடுத்தார். இதுதொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் சிங்கமுத்துவுக்கு எதிராக நான் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சிங்கமுத்து, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் என்னைப்பற்றி தரக்குறைவாகப் பேசியுள்ளார். இது பொதுமக்கள் மற்றும் எனது ரசிகர்கள் மத்தியில் எனக்கு இருக்கும் நற்பெயரைகளங்கப்படுத்தும் செயல்.

 “பொதுமக்கள் மத்தியில் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்ட ஈடாக வழங்கும்படி சிங்கமுத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும், தன்னை பற்றி அவதூறாகப் பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும்” எனவும் நடிகர் வடிவேலு கோரியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, மனுவுக்கு பதிலளிக்கும்படி நடிகர் சிங்கமுத்துவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று நீதிபதி டீக்காராமன் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நடிகர் சிங்கமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'வக்காலத்து தாக்கல் செய்ய உள்ளதால் அவகாசம் வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வக்காலத்து தாக்கல் செய்யவும், பதில்மனுத் தாக்கல் செய்யவும் அவகாசம் வழங்கி, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

Trending News

Latest News

You May Like