#JUST IN : வடிவேலு-சிங்கமுத்து வழக்கு: நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

யூடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியில், தன்னை குறித்து அவதூறாகப் பேசியதற்காக ஐந்து கோடி ரூபாயை மான நஷ்ட ஈடாக வழங்கக் கோரி நடிகர் சிங்கமுத்துக்கு உத்தரவிடவும், தன்னை பற்றி அவதூறாகப் பேசத் தடை விதிக்க வேண்டும் எனவும் நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று (மார்ச் 05) சென்னை மாஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில், நடிகர் வடிவேலு நேரில் ஆஜரானார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுக நடிகர் வடிவேலுவுக்கு மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் வடிவேலுவிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளோம் என்று நடிகர் சிங்கமுத்து தரப்பு விளக்கம் அளித்துள்ளது. வழக்கை உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கிறேன், அங்கே முறையிட்டுக் கொள்ளுங்கள் என்று மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தினார்.