#JUST IN : டிடிவி தினகரன் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு..!

தேனி லோக்சபா தொகுதி என்பது அதிமுகவின் கோட்டையாகும். இங்கு திமுக நேரடியாக போட்டியிட்டு வெற்றி பெற்றது கடைசியாக 1996ம் ஆண்டு தான்.. அதற்கு முன்பு 1980ல் மட்டுமே வென்றது. இதனால் திமுக இந்த தொகுதியை எப்போதுமே கூட்டணிக்கு தந்துவிடும். குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்குத்தான் தந்துவிடும்.. காங்கிரஸ் கட்சி தான் இங்கு 2004, 2009ம் ஆண்டு வெற்றி பெற்றது. 2014, 2019களில் நடந்த தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெற்றது..
தேனியில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு ஓரளவு செல்வாக்கு இருக்கிறது. இதேபோல் ஓ பன்னீர்செல்வத்திற்கு கணிசமான ஆதரவு உள்ளது. இந்நிலையில் தற்போது டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே கூட்டணியில் இருக்கிறார்கள். அதுவும் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் ஆதரவில் உள்ளதால் களம் அதிமுகவிற்கு பெரும் சவாலாக உள்ளது.
இந்நிலையில் தேனி தொகுதியில் டி.டி.வி. தினகரன் போட்டியிடுவார் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார். பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு தேனி, திருச்சி என இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் தேனி தொகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி, தானே களமிறங்க முடிவு செய்திருக்கிறார். தனது விருப்பத்தின்படியே டிடிவி தேனியில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக ஓபிஎஸ் கூறியுள்ளார்.