#JUST IN : தவெக செயற்குழுவில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றம்..!!
சென்னை பனையூரில் இன்று (நவ., 03) அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஆளுநர் மீதான நிலைபாடு, கல்விக்கொள்கை, இரு மொழிக் கொள்கை, சாதிவாரி கணக்கெடுப்பு, காமராஜர் மாதிரி பள்ளிகள், மாநில தன்னாட்சி, நீட் தேர்வில் இருந்து விலக்கு, ஒரே நாடு ஒரே தேர்தலை கைவிட வேண்டும் உள்ளிட்ட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நடந்த மாநாட்டில் கொள்கைகள் அறிவிக்கப்பட்டன.
மேலும் சீமானுக்கு பதிலளிக்கும் வகையில் தவெக நிர்வாகிகள் பேசி வந்த நிலையில், யாரையும் தரம் தாழ்ந்து விமர்சிக்கக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். கட்சியில் புதிய தொண்டர்களை இணைக்குமாறும், கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதே நோக்கம் எனவும் கூறிய அவர், தேவையற்ற சர்ச்சைகளில் சிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.