#JUST IN :திரிணாமுல் எம்.எல்.ஏ. ராஜினாமா..!

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தபாஸ் ராய் கட்சியின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்து, இன்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
செய்தியாளர்களைச் சந்தித்த தபாஸ் ராய், "சட்டமன்ற சபாநாயகரிடம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ளேன். நான் இப்போது சுதந்திர பறவையாக இருக்கிறேன்" என்று கூறினார். மேலும், ஜனவரி மாதம் தனது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியபோது, கட்சித் தலைமை தன்னுடன் நிற்கவில்லை என்று குற்றம்சாட்டி, ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.