1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : இதனால் தான் சபையைவிட்டு வெளியேறினார் ஆளுநர் - ஆளுநர் மாளிகை..!

1

நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவை தொடங்கியதும் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என கூறி சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு வழங்கிய உரையை படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார். இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வாசித்தார். தமிழக அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவி. சட்டப்பேரவையில் இருந்து தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே கிளம்பினார். 

இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு தயாரித்த ஆளுநர் உரையில் உண்மைக்கு புறம்பான கருத்துகள் இருந்தன. தேசிய கீதம் தமது உரைக்கும் முன்பும் பின்பும் இசைக்கப்பட ஆளுநர், முதல்வருக்கும் சபாநாயகருக்கும் பலமுறை கடிதம் எழுதியிருந்தார்.ஆனால் ஆளுநரின் அறிவுறுத்தலை அரசு நிராகரித்துவிட்டது.

அரசிடம் இருந்து ஆளுநர் உரைக்கான அறிக்கையானது பிப்ரவரி 9ஆம் தேதி கிடைத்தது என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. உரையில் ஏராளமான பத்திகள் தவறானதாகவும் உண்மைக்கு புறம்பானதாகவும் இருந்தன என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

அரசின் சாதனைகளை பிரதிபலிப்பதற்கு பதில் ஆளுநர் உரையில் தவறான கருத்துகள் இடம் பெற்றிருந்தன. இதனால்தான் தமிழக அரசின் உரையை ஆளுநர் புறக்கணித்தார். ஆளுநர் உரையை சபாநாயகர் படித்து முடித்தவுடன் தேசிய கீதம் பாட அனைவரும் எழுந்தனர்.

அப்போது வழக்கமான நடைமுறையை பின்பற்றாமல் ஆளுநரை சபாநாயகர் அப்பாவு விமர்சிக்க தொடங்கிவிட்டார். நாதுராம் கோட்சே மற்றும் பலரை பின்பற்றுபவராக ஆளுநர் ரவி இருக்கிறார் என கடுமையாகத் தாக்கினார் சபாநாயகர். இதனால் சபாநாயகரின் செயல்பாடு அவரது பதவியின் கண்ணியத்தையும் அவையின் மாண்பையும் குறைத்துவிட்டது. தாம் கோட்சே, சாவர்க்கரின் வாரிசு என சபாநாயகரின் குற்றச்சாட்டு அவருடைய பதவியின் கண்ணியத்தை குறைத்துவிட்டது. இவ்வாறு ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


 

Trending News

Latest News

You May Like