#JUST IN : புயல் சின்னம் மெதுவாக நகர்கிறது..!
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள புயல் சின்னம் மெதுவாக நகர்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது..
நாகைக்கு 520 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு 720 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ள புயல் சின்னம், 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்புயல் சின்னம் நாளை (நவ.27) புயலாக வலுபெற உள்ளது.