#JUST IN : சென்னையில் சற்றுமுன் நடந்த பயங்கரம்..!!

சென்னை நந்தம்பாக்கத்தில் கல்லூரி முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்ற முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி அக்ஷிகாவை நவீன் என்ற காதலன் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு கல்லூரி மாணவி அக்ஷிகா மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்தில் ஆழமாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
இளம்பெண் சத்தமிட்டுக் கூச்சலிட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதனைகண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததோடு மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அது அடிப்படையில் தேடுதல் வேட்டையை நடத்திய போலீசார் குடியிருப்பின் மீது ஏறி தப்பிச் செல்ல முயன்ற நாடக காதலன் நவீனை விரட்டிப் பிடித்த கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த மாணவி அக்ஷிகா தற்பொழுது நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.