#JUST IN : ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக ரன்கள் குவித்த முதல் அணி..!
10 ஓவர்களுக்கு அதிக ரன்கள் குவித்த முதல் அணி என்ற பெருமையை பெற்றது சன்ரைசஸ் ஹைதராபாத் அணி. ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் 10 ஓவர்களுக்கு அதிக ரன்கள் (148 ரன்கள்) குவித்த முதல் அணி என்ற பெருமையை பெற்றது சன்ரைசஸ் ஹைதராபாத் அணி.
ஐபிஎல் தொடங்கி தற்போது 17-வது சீசன் நடைபெறுகிறது. இந்த 17 ஆண்டுகளிலும் இப்படி ஒரு சாதனையை இதுவரை எந்த அணியும் செய்ததில்லை. கடைசியாக 2021 ஆம் ஆண்டு அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் இதே சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக மும்பை அணி மூன்று விக்கெட்டுகள் இழந்து 10 ஓவர் முடிவில் 131 ரன்கள் குவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்து அபரா சாதனை படைத்துள்ளது. 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்க உள்ளது.