1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : வரும் சனிக்கிழமை கூடுகிறது தமிழ்நாடு சிறப்பு சட்டமன்ற கூட்டம்..!

1

சட்டமன்றத்தில்  நிறைவேற்றி அனுப்பிய  மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை என, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு விசாரணையில் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் பல்வேறு கருத்துகளை கூறி இருந்த நிலையில், நிலுவையில் இருந்த மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பினார்.  இதில், தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா, பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரே செயல்படும் வகையில் மாற்றப்பட்ட மசோதா உள்ளிட்டவற்றை ஆளுநர் மாளிகை திருப்பி அனுப்பியுள்ளது.

இந்நிலையில் வரும் சனிக்கிழமை சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை நடத்தி, ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான மசோதா, கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளாக குறைப்பது தொடர்பான மசோதா, பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே செயல்படும் வகையிலான மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்.

Trending News

Latest News

You May Like