1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : தமிழ்நாடு சட்டப்பேரவை கூடும் தேதியில் திடீர் மாற்றம்..!

1

2024-2025ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் பிப்ரவரி 19ம் தேதியும், வேளாண்மை பட்ஜெட் பிப்ரவரி 20ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது நடைபெற்ற விவாதங்களுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். பிப்ரவரி 22ம் தேதி நடைபெற்ற விவாதத்துக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. வழக்கமாக தமிழகத்தில் பட்ஜெட் கூட்டம் முடிந்ததும், மார்ச் மாதம் துறை வாரிய மானிய கோரிக்கை மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கான கூட்டம் தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறும். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் நடந்ததால் அந்த கூட்டம் நடைபெறவில்லை.

“தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அடுத்த கூட்டம் வருகிற 24ம் தேதி (திங்கள்) காலை 10 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறும்” என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில்.நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, "தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன் 20-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும். மேலும், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸின் தாரகை கத்பர்ட்ற்கு நாளை காலை 11 மணிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும்" என அறிவித்துள்ளார். ஜூன் 24-ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூடும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like