#JUST IN : மாணவர்களுக்கு உதவித்தொகை 2 மடங்கு உயர்வு: தமிழக அரசு..!
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பல்வேறு நலத்திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் செயல்படுத்தி வருகிறது.
மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர் உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்காக ரூ.14,90,52,000 அனுமதித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1-5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை ₹2,000 ஆகவும், 6- 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ₹6,000ஆகவும், 9- 12ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ₹8,000ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.