#JUST IN : 'இந்தியன் 2' சிறப்பு காட்சி திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி..!

இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா நடிப்பில் இந்தியன் திரைப்படம் உருவானது. இந்த திரைப்படம் 1996ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதையடுத்து ‛இந்தியன் - 2’ திரைப்படம் தயாரிக்கப்பட்டு வந்தது.
இயக்குநர் சங்கர் திரைக்கதை எழுதி இயக்கி உள்ள ‛இந்தியன் - 2’ திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன், எஸ்ஜே சூர்யா, சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ் உள்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.‛இந்தியன் 2’ திரைப்படம் நாளை (ஜூலை 12) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் 'இந்தியன் 2' திரைப்படத்திற்கு நாளை ஒரு நாள் (12.07.2024) மட்டும் சிறப்பு காட்சி திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஷங்கர்- கமல்ஹாசன் கூட்டணியில் நாளை திரைக்கு வர உள்ள 'இந்தியன் 2' திரைப்படத்திற்கு நாளை ஒரு நாள் (12.07.2024) மட்டும் சிறப்பு கட்சி திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது! pic.twitter.com/nqvSjcpIW3
— Kannan Jeevanantham / JK (@Im_kannanj) July 11, 2024